படகு வீடு என்னும் மிதக்கும் சொர்க்கம் .....
பெயருக்கு ஏற்ப படகில் அமைக்கப்பட்ட அனைத்து வசதிகளும் நிரம்ப அமையப்பெற்ற ஓர் அற்புத உலகம் . நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பெற்ற இரண்டு படுக்கை அறைகள் ஏசி வசதியுடன் . நமது குறிப்பறிந்து பணிபுரிய வேலையாள் தனிப்பட்ட சமையற்காரர் மற்றும் படகு ஓட்டுநர் . நமது படுக்கை அறையின் ஜன்னல் கதவை திறந்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அஷ்டமுடி ஏரி பறந்து விரிந்து காட்சியளிக்கிறது . என்ன ஒரு அருமையான பயணம்.
நாம் படகில் ஏறியதும் நம்மை வரவேற்கும் வகையில் பழச்சாறு மற்றும் பழங்கள் தருகிறார்கள் . பின்னர் நமது விருப்பத்திற்கு ஏற்ப உணவு தயார் செய்யப்படுகிறது . அவர்களது உணவுப்பட்டியல் போக நாம் நண்டு , இறால் , சிப்பி (Mussels) போன்றவற்றை வாங்கி கொடுத்தால் அதையும் சுவைபட சமைத்து தருவர். இவை அனைத்தும் படகில் அமைந்துள்ள நவீன சுகாதாரமான சமையல் அறையில் தயார் செய்யப்படுகிறது .
| சமையல் அறை |
மதிய உணவாக மூன்று வகை பச்சடி, பொரியல் , கூட்டு, அப்பளம் , மீன் fry , இறால் fry யுடன் போதும் போதும் என்ற அளவிற்கு வயிறு புடைக்க ஒரு கட்டு கட்டினோம்.
| மதிய உணவு |
மதிய உணவிற்கு பின் உண்டகளைப்பு நீங்க படகின் தாலாட்டில் கண்ணயர்ந்தோம் . நல்ல உறக்கத்தில் திடீரென்று படகு தள்ளாடுவது போல் ஓர் உணர்வு . அறையில் இருந்து வெளியே வந்து படகின் கேப்டனிடம் சென்று விசாரித்ததில் நாம் இப்பொழுது ஏரியின் மையப்பகுதியில் சென்றுகொண்டு உள்ளோம் மிகவும் ஆழமான பகுதி என்று கூறி நம்மை சிறிது படகு ஓட்ட சொல்லி ஊக்கப்படுத்தினார் .
இயற்கை அழகை ரசித்துக் கொண்டு அவரிடம் பேச்சு வளர்த்திக்கொண்டு செல்கையில் நமது சமையல் நண்பர் மாலை சிற்றுண்டியாக நேந்திரம் பழம் பஜ்ஜி மற்றும் தேனீர் கொடுத்து நம்மை உபசரித்தார் .
தொடரும் ......
Nice Picture Senthil.. Kalayana Samyal Saadham !!!.. Brought back the Nostalgic memories of my trip to Azhappula.. Undoubtedly it is a wonderful experience.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
Deleteதங்கள் கருத்துக்கு நன்றி
Delete