Sunday, August 30, 2015

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில்

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில்:      நண்பர்களே, வணக்கம். நலம்தானே.      நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநில...

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 2

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 2: கொந்தளிக்கும் கடலில்       1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பல் கம்பீரமாய் தலை நிமிர்ந்து ந...

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 3

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 3: அண்டார்டிகா       உலக உருண்டையை உற்று நோக்கினால், தெற்கே 40 டிகிரிக்கும் 60 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில், கடலானது, பூமிப் ...

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 4

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 4: வெயிலில் வாடும் இரவு       நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. தவறு தவறு என்று நீங்கள் உரத்துக் கூறுவது என் செவிகளில் விழுகிற...

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 5

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 5

திண்டுக்கல் தனபாலன்: வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை

திண்டுக்கல் தனபாலன்: வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை: தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 மற்றும் 2013 செப்டம்பர் 1 அன்றும் சென்னையிலும், 2014 அக்டோபர் மாத...

சமஸ்: குஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்!

சமஸ்: குஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்!: யா ர் இந்த ஹர்திக் படேல்? ஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு ...

Tuesday, August 18, 2015

Places to see - Kollam Part 2

படகு வீடு என்னும் மிதக்கும் சொர்க்கம் .....
                                                           
                                            பெயருக்கு ஏற்ப படகில் அமைக்கப்பட்ட அனைத்து வசதிகளும் நிரம்ப அமையப்பெற்ற ஓர் அற்புத உலகம் . நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பெற்ற இரண்டு படுக்கை அறைகள்  ஏசி வசதியுடன் . நமது குறிப்பறிந்து பணிபுரிய வேலையாள் தனிப்பட்ட சமையற்காரர் மற்றும் படகு ஓட்டுநர் . நமது படுக்கை அறையின் ஜன்னல் கதவை திறந்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அஷ்டமுடி ஏரி பறந்து விரிந்து காட்சியளிக்கிறது . என்ன ஒரு அருமையான பயணம்.  



                                              நாம் படகில் ஏறியதும் நம்மை வரவேற்கும் வகையில் பழச்சாறு மற்றும் பழங்கள் தருகிறார்கள் . பின்னர் நமது விருப்பத்திற்கு ஏற்ப உணவு தயார் செய்யப்படுகிறது . அவர்களது உணவுப்பட்டியல் போக நாம் நண்டு , இறால் , சிப்பி (Mussels) போன்றவற்றை வாங்கி கொடுத்தால் அதையும் சுவைபட சமைத்து தருவர். இவை அனைத்தும் படகில் அமைந்துள்ள நவீன சுகாதாரமான சமையல் அறையில் தயார் செய்யப்படுகிறது . 

சமையல் அறை 


                                                  மதிய உணவாக மூன்று வகை பச்சடி, பொரியல் , கூட்டு, அப்பளம் , மீன் fry , இறால் fry யுடன் போதும் போதும் என்ற அளவிற்கு வயிறு புடைக்க ஒரு கட்டு கட்டினோம்.

மதிய உணவு 

                                               மதிய உணவிற்கு பின் உண்டகளைப்பு நீங்க படகின் தாலாட்டில் கண்ணயர்ந்தோம் . நல்ல உறக்கத்தில் திடீரென்று படகு தள்ளாடுவது போல் ஓர் உணர்வு . அறையில் இருந்து வெளியே வந்து படகின் கேப்டனிடம் சென்று விசாரித்ததில் நாம் இப்பொழுது ஏரியின் மையப்பகுதியில் சென்றுகொண்டு உள்ளோம் மிகவும் ஆழமான பகுதி என்று கூறி நம்மை சிறிது படகு ஓட்ட சொல்லி ஊக்கப்படுத்தினார் . 
           
                                                இயற்கை அழகை ரசித்துக் கொண்டு அவரிடம் பேச்சு வளர்த்திக்கொண்டு செல்கையில் நமது சமையல் நண்பர் மாலை சிற்றுண்டியாக நேந்திரம் பழம் பஜ்ஜி மற்றும் தேனீர் கொடுத்து நம்மை உபசரித்தார் .

                                                                                                               தொடரும் ......




Sunday, August 16, 2015

Places to See - Kollam Part 1

கொல்லத்தில் குடும்பத்துடன் ஒரு குதூகலம் ...

                                      கொல்லம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரம். " கொல்லம் கண்டார் இல்லம் காணார் " என்னும் பழமொழிக்கு ஏற்ப அமைந்த ஊர் .
                                     நீண்ட நாட்களாகவே படகு இல்லம் (House Boat) செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொல்லம் சென்றதன் வாயிலாக இனிதே நிறைவேறியது .

                                      மதுரையில் இருந்து இரவு கொல்லம் பயனியர் புகைவண்டி மூலம் மறுநாள் காலை கொல்லம் ரயில் நிலையம் அடைந்தோம் . இப்பயனத்தை எனது மகள் செல்வி மிகவும் ரசித்தால் . கொல்லத்தில் முன்பதிவு செய்யப்பட்டு இருந்த படகு வீட்டிற்கு காலை 11 மணியளவில் சென்று எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம் .  எங்களுடைய பயணத்திட்டத்தின் படி  இன்று காலை 11 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஓர் படகு இல்லம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது .





                                                                                                                             தொடரும்....

Mahapalipuram

கல்லிலே கலைவண்ணம் கண்டான் ...
இச்ஜஹத்திலே நிலையாப்  புகழ் கொண்டான் ....
இதோ எம்முன்னவர்களின் படைப்பாற்றல்


மகாபலிபுரம் என்னும் மயன் வடித்த மாயாபுரி


puthiya payanam

வணக்கம் எனது புதிய முயற்சி இனிது ஆரம்பம்
நம் தாய் திருநாட்டின் தென்கோடி முனையில் வான்புகழ் தந்த வள்ளுவன் பீடம் ...